ஆசியச் சமூகத்தின் “மாற்றியமைப்பதில் பெரும் பங்களிப்பை ஆற்றியோருக்கான” விருதுகள் - இமயமலையின் குங்பூ பெண் துறவிகள்
November 13 , 2019 2083 days 683 0
புது தில்லியில் குங்பூ பெண் துறவிகளை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) பிரஹலாத் சிங் படேல் பாராட்டினார்.
ட்ருக்பா சமூகத்தின் பெண் துறவிகள், சமீபத்தில் நியூயார்க்கில் ஆசியச் சமூகத்தின் மதிப்புமிக்க “மாற்றியமைப்பதில் பெரும் பங்களிப்பை ஆற்றியோருக்கான” (game – changer) விருதைப் பெற்றனர்.
இமயமலையில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் பாலின நிலைப்பாடுகளை அகற்றுவதற்காகவும் அவர்கள் ஆற்றிய பெரும் பணிக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
700 நபர்களைக் கொண்ட ஒரு வலிமையான குங்பூ பெண் துறவிகள் சமுதாயமானது ட்ருக்பா வம்சாவளியைச் சேர்ந்ததாகும். இந்த வம்சமானது இமயமலையில் உருவாகிய, ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு புத்த மரபாகும்.
இந்த விருது பற்றி
ஆசியச் சமூகமானது உலகளாவிய சூழலில் ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றைச் சேர்ந்த மக்கள், தலைவர்கள் மற்றும் நிறுவனங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிப்பதற்காகவும் பங்களிப்புகளை வலுப்படுத்துவதற்காகவும் அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.