ஆசியான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்திப்பு – ப்ளஸ்
December 2 , 2020 1718 days 697 0
வியட்நாம் ஆனது ஆசியான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்திப்பு – ப்ளஸ் (ASEAN Defence Ministers’ Meeting Plus – ADMM Plus) என்ற நிகழ்விற்கு இந்தியாவை அழைத்துள்ளது.
இது 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வியட்நாம் நாட்டினால் நடத்தப்பட உள்ளது.
ADMM-Plus என்பது ஆசியான் மற்றும் அதன் 8 உரையாடல் பங்காளர்களுக்கான ஒரு தளமாகும்.
2007 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற 2வது ADMM ஆனது ADMM-Plus அமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒரு கருத்தாக்க ஆவணத்தை ஏற்றுக் கொண்டது.
இது இப்பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டிற்காக வேண்டி பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரியக் குடியரசு, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்த 8 உரையாடல் பங்காளர்களாகும்.
இவை ஒட்டுமொத்தமாக ”ப்ளஸ் நாடுகள்” எனப்படும்.
கடல்சார்பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, மனிதாபிமான உதவி & பேரிடர் நிவாரணம், அமைதி நடவடிக்கைகள் மற்றும் இராணுவ மருத்துவம் ஆகியவை இந்த செயல்முறையின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட 5 நடைமுறை ஒத்துழைப்புப் பகுதிகள் ஆகும்.