ஆசியான் பிராந்திய மன்றத்தின் வெளியுறவு அமைச்சர்களின் 28வது சந்திப்பில் பங்கேற்ற இந்தியப் பிரதிநிதிக் குழுவிற்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் டாக்டர். ராஜ்குமார் ரஞ்சன் சிங் தலைமை வகித்தார்.
இந்தச் சந்திப்பானது புருனே தாருசலாம் தலைமையில் நடைபெற்றது.
ஆசியான் பிராந்திய மன்றத்தின் அமைச்சர்கள் இணைந்து இளையோர், அமைதி மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கான செயல்பாட்டு நிரல்கள் குறித்த ஒரு இணை அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.