TNPSC Thervupettagam

ஆசியாவின் முதல் பாலைவனக் கருத்துரு கொண்ட இரவு நேர வனவிலங்கு உலா

August 18 , 2026 13 hrs 0 min 51 0
  • குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள டீசாவில் பாலைவன விலங்கியல் பூங்கா மற்றும் இரவு நேர வனவிலங்கு உலாவை அமைப்பதற்கான திட்டத்திற்கு மத்திய விலங்கியல் பூங்கா ஆணையம் (CZA) ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஆசியாவின் முதல் பாலைவனக் கருத்துரு கொண்ட, வாகனத்தில் சுற்றிப் பார்க்கும் இரவு நேர வனவிலங்கு உலாவை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
  • முன்மொழியப்பட்ட இந்தப் பூங்காவில் மற்ற பாலைவனச் சூழல் மண்டலங்களைச் சேர்ந்த உயிரினங்களும் இடம்பெறும்.
  • இந்தத் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஆப்பிரிக்க இனங்களில் அங்கோலா ஒட்டகச் சிவிங்கி, கிரேவியின் வரிக்குதிரை, சிமிட்டார் ஓரிக்சு, ஆப்பிரிக்க குடு, ஸ்பிரிங்போக், அட்ரா கெஸல், கருப்பு காண்டாமிருகம், சிம்பன்சி, மீர்கட், ஆப்பிரிக்க சிறுத்தை, ஆப்பிரிக்க சிங்கம், ஃபென்னெக் நரி, வௌவால் காது கொண்ட நரி மற்றும் நெருப்புக் கோழி ஆகியவை அடங்கும்.
  • கங்காருக்கள், ஈமுக்கள் மற்றும் வாலபிக்கள் ஆகியவை இந்தப் பூங்காவிற்காகத் திட்டமிடப் பட்டுள்ள ஆஸ்திரேலிய இனங்களில் அடங்கும்.
  • முன்மொழியப்பட்ட பாலைவன விலங்கியல் பூங்கா மற்றும் இரவு சஃபாரி குஜராத்தில் அமைந்துள்ளதுடன் அதேசமயம் நன்கு அறியப்பட்ட பாலைவன தேசியப் பூங்கா ராஜஸ்தானில் அமைந்துள்ளது.
  • பாலைவன தேசியப் பூங்கா என்பது இந்திய மாநிலமான ராஜஸ்தானில், ஜெய்சல்மர் மற்றும் பார்மர் நகரங்களுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்காவாகும்.
  • பூங்காவின் சுமார் 44% மணல் குன்றுகளால் ஆனது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்