ஆசியாவில் ஊடாடும் தொடர்பு மற்றும் நம்பிக்கைக் கட்டமைப்புச் செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கு (CICA)
September 30 , 2020 1871 days 604 0
சமீபத்தில் இந்தியாவின் பங்கேற்புடன் CICA அமைப்பின் (Conference on Interaction and Confidence-Building Measures in Asia) சிறப்பு அமைச்சரவைக் கருத்தரங்கானது நடத்தப் பட்டது.
இது ஆசியாவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைப்புத் தன்மை ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக செயல்படும் அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு மன்றமாகும்.
இந்தக் கருத்தரங்கின் முக்கியக் கருத்துருவானது சிறிய மற்றும் பெரிய நாடுகளின் பாதுகாப்பு, கூட்டு முயற்சிமற்றும் பரஸ்பர பயன்பாட்டுத் தொடர்பு ஆகியவற்றின் பிரிக்க முடியாத தன்மை என்ற முன்னுரிமையை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.
CICA மாநாடானது CICA செயல்பாடுகளுக்கான விவாதங்களை நடத்துவதற்காகவும் அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காகவும் முன்னுரிமைகளை நிர்ணயிப்பதற்காகவும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படுகின்றது.
வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பானது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும்.
CICA ஆனது 27 உறுப்பு நாடுகள்; 8 பார்வையாளர் நாடுகள்; 5 பார்வையாளர் அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
CICAல் ஒரு நாடு உறுப்பினராக இணைவதற்கு, அந்த நாடு தனது நிலப்பகுதியை ஆசியாவில் கட்டாயம் பகிர்ந்திருக்க வேண்டும்.