TNPSC Thervupettagam

ஆசியாவில் போக்குவரத்தைக் கார்பன் நீக்கம் செய்தல் - NDC-TIA II

November 20 , 2026 11 hrs 0 min 39 0
  • ஆசியாவிற்கான தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு–போக்குவரத்து முன்னெடுப்பின் (NDC-TIA II) இரண்டாம் கட்டத்தின் கீழ், நிதி ஆயோக் மற்றும் ஜெர்மன் மேம்பாட்டு நிறுவனமான GIZ (Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit) ஆகியவை ஓர் அமலாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • NDC-TIA II என்பது ஆசியாவில் குறைந்த கார்பன் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக ஜெர்மனியின் சர்வதேச பருவநிலை முன்னெடுப்பால் (IKI) நிதியளிக்கப்படும் ஒரு பிராந்திய ஒத்துழைப்புத் திட்டமாகும்.
  • இது இந்தியா, சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் கவனம் செலுத்துவதோடு, மின்சார இயக்கத்தின் மூலம் போக்குவரத்து உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதன் முதலாம் கட்டம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி 2028 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை தொடரும்.
  • இந்த முன்னெடுப்பு மின்சார சரக்கு வாகனங்கள், அதிவேக மின்னேற்ற நிலையங்கள், மின்சாரக் கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் பசுமை நிதியுதவி ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்