ஆசியாவை மாற்றியமைத்ததில் பெரும் பங்களிப்பாளர் விருது ( Game Changer award )
August 28 , 2018 2513 days 793 0
இந்தியாவில் பிறந்தவரும் பெப்ஸிகோவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திரா நூயி, உலகளாவிய கலாச்சார அமைப்பான ஆசியச் சங்கத்தால் (global cultural organisation Asia Society) 2018 ஆம் ஆண்டின் ஆசியாவை மாற்றியமைத்ததில் பெரும் பங்காளிப்பாளர் என்ற விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
நூயி அவரது முன்னோடிகளின் வணிகச் சாதனைகளை அங்கீகரித்தல், மனிதாபிமான சாதனைகள், சிறுமிகள் மற்றும் பெண்களுக்காக வாதிடுதல் ஆகியவற்றிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த 2018 ஆசியாவை மாற்றியமைத்தலில் பெரும்பங்களிப்பாளர் விருதானது வரையறுக்கப்பட்ட தைரியம், அற்புதமான வேலைகள், உலகின் சக குடிமகன்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் தடைகளை உடைத்தல் போன்ற தகுதிகளில் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு வரும் அக்டோபரில் வழங்கப்படவுள்ளது.