TNPSC Thervupettagam

ஆசியா - ஆப்பிரிக்கா விவசாயக் கூட்டணி

March 20 , 2026 11 hrs 0 min 14 0
  • ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா இடையே வர்த்தகம், விவசாய ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்தை அதிகரிக்க ஆசியா ஆப்பிரிக்கா விவசாயக் கூட்டணி நிறுவப்பட்டுள்ளது.
  • கூட்டாண்மை மற்றும் கொள்கைச் சீரமைப்புக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக, நிறுவனங்கள் சட்டம், பிரிவு 8-ன் கீழ் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் கூட்டணி விவசாய-உணவு மதிப்புச் சங்கிலிகளை மேம்படுத்துவதிலும், இரு பிராந்தியங்களுக்கு இடையே அறிவு மற்றும் தொழில்நுட்பப் பகிர்வை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
  • உலகளாவிய விவசாய உற்பத்தியில் ஆசியாவும் ஆப்பிரிக்காவும் இணைந்து 40 சதவீதத்திற்கும் அதிகமாகப் பங்களிக்கின்றன.
  • இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான இருதரப்பு விவசாய வர்த்தகம் ஆண்டு தோறும் 90 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்