ஆசியா-பசிபிக் பகுதியில் உள்ள மிகப்பெரிய தரவு மையச் சந்தைகள்
November 23 , 2022 1007 days 422 0
ஹைதராபாத், சென்னை மற்றும் புது தில்லி ஆகியவை ஆசிய-பசிபிக் (APAC) பிராந்தியத்தில் உள்ள மூன்று சிறந்த தரவு மையச் சந்தைகளாக உருவாகியுள்ளன.
இது நைட் ஃபிராங்கின் அறிக்கையின்படி பெறப்பட்ட ஒரு தகவலாகும்.
தரவு மையம் என்பது பெரிய அளவிலான தரவைச் சேகரிக்க, செயலாக்க, சேமிக்க மற்றும் அதைப் பரப்புவதற்கு நிறுவனங்கள் அவற்றைப் பயன்படுத்துகின்ற வகையில் நெட்வொர்க் செய்யப்பட்ட கணினிகள், சேமிப்பக அமைப்புகள் மற்றும் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு வசதி ஆகும்.