TNPSC Thervupettagam

ஆசியா மற்றும் பசிபிக் பகுதி SDG முன்னேற்ற அறிக்கை 2026

February 25 , 2026 2 hrs 0 min 30 0
  • ஆசியா மற்றும் பசிபிக் பகுதி SDG முன்னேற்ற அறிக்கை 2026, ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தால் (ESCAP) வெளியிடப்பட்டது.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் அளவிடக்கூடிய 117 நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) இலக்குகளில் 103 இலக்குகளை இந்தப் பகுதி தவறவிட வாய்ப்புள்ளது என்று அறிக்கை எச்சரிக்கிறது.
  • தற்போது 14 இலக்குகள் மட்டுமே அதன் சரியான பாதையில் உள்ளன, தற்போதைய போக்குகள் தொடர்ந்தால் கிட்டத்தட்ட 88% இலக்குகள் தவறவிடப்படும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • காலநிலை நடவடிக்கை, கடல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றில் கடுமையான பின்னடைவை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என்பதோடு இது நீண்டகாலப் பொருளாதார மற்றும் பெரும் சமூக முன்னேற்றத்தை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது.
  • அதிகரித்து வரும் உமிழ்வுகள், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் கடல் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் சவால்கள் 2030 இலக்கை அடைவதற்கு முக்கிய தடைகளாக உள்ளன.
  • இருப்பினும், இந்தப் பிராந்தியம், குறிப்பாக SDG 9 இன் கீழ், தொழில், புத்தாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஒப்பீட்டளவில் ஒரு வலுவான செயல்திறனைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்