ஆசியா 2020க்கான QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை
November 29 , 2019
2029 days
634
- ஆசியா 2020க்கான சமீபத்திய QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையில், ஆசியக் கண்டத்தில் உள்ள 550 இடங்களில் 96 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.
- சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக ஆசியாவின் சிறந்த பல்கலைக் கழகத்திற்கான முதலிடத்தைப் பிடித்துள்ளது.
- அதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் ஹாங்காங் பல்கலைக்கழகம் ஆகியன இதில் உள்ளன.
- இந்தியாவில் இருந்து சிறப்பாக செயல்படும் நிறுவனமாக பம்பாய் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (34வது இடம்) இடம் பிடித்தது.
- அதைத் தொடர்ந்து டெல்லி இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் 43வது இடத்திலும், மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் 50வது இடத்திலும் உள்ளன.
- இதுபோன்ற முதலாவது QS தரவரிசையானது 2009 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.

Post Views:
634