ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வெற்றியாளர்கள்
November 1 , 2025 2 days 50 0
பஹ்ரைனில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஜன் ஆறுமுக பாண்டியன் மற்றும் எட்வினா ஜேசன் ஆகியோர் பதக்கங்களை வென்றுள்ளனர்.
கோவில்பட்டியைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் மகாராஜன் ஆறுமுக பாண்டியன் ஆடவருக்கான 60 கிலோ எடைப் பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் எட்வினா ஜேசன் இந்திய அணியின் ஒரு பகுதியாக 400 மீட்டர் ரிலேவில் ஒன்று மற்றும் மெட்லி ரிலேவில் மற்றொன்று என இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.