மங்கோலியாவின் உலான்பாதரில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 16 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்த நிலையில்கஜகஸ்தான் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
இந்தியா மொத்தம் 5 தங்கம், 3 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
ஆடவருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் விஸ்வநாத் சுரேஷ் தங்கம் வென்றார், இதன் மூலம் ஆடவர் ஆசியப் பட்டத்திற்கான இந்தியாவின் 5 ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
ஆடவருக்கான 60 கிலோ எடைப்பிரிவில் சச்சின் சிவாச் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்திய வீராங்கனைகள் 4 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றனர்.
இந்தியா அதிக மொத்தப் பதக்கங்களை வென்றிருந்தாலும், கஜகஸ்தானை விட குறைவான தங்கப் பதக்கங்களை வென்றதால் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.