TNPSC Thervupettagam

ஆசிய சிங்கம் பாதுகாப்புத் திட்டம் - குஜராத்

October 18 , 2026 4 days 85 0
  • குஜராத்தின் பர்தா வனவிலங்கு சரணாலயம், சுமார் 144 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய சிங்கங்கள் திரும்பி வந்ததைத் தொடர்ந்து அவற்றுக்கான முக்கியமான இரண்டாவது வாழ்விடமாக மாறியுள்ளது.
  • பர்தா குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில், போர்பந்தர் மற்றும் தேவபூமி துவாரகா மாவட்டங்களில் அமைந்துள்ளது; இது சுமார் 192.31 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் 1979 ஆம் ஆண்டில் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
  • அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டு மக்கள் தொகை மதிப்பீட்டின்படி, பர்தாவில் 6 பெரிய சிங்கங்கள் மற்றும் 11 குட்டிகள் என 17 சிங்கங்கள் உள்ளன; 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கிரில் இருந்து ஒரு ஆண் சிங்கம் இங்கு வந்ததன் மூலம் சிங்கங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் பணி தொடங்கியது, அதைத் தொடர்ந்து ஐந்து பெண் சிங்கங்கள் இடமாற்றம் செய்யப் பட்டன.
  • இந்திய அரசால் 2020 ஆம் ஆண்டில் சிங்கப் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • ஒரே ஒரு முக்கிய பகுதியை (கிர்) சார்ந்திருப்பதைக் குறைத்து, வாழ்விட விரிவாக்கத்திற்கு பர்தா சரணாலயம் துணை புரிகிறது; இரையின் அடிப்படையை மேம்படுத்துதல் மற்றும் மனித-சிங்க மோதலைத் தடுத்தல் ஆகியவை நீண்ட காலப் பாதுகாப்பிற்கு முக்கியமானவை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்