கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் நடைபெற்ற 16வது ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 50 தங்கப் பதக்கங்களை வென்றது.
முதல் முறையாக ஒட்டு மொத்தப் பதக்கப் பட்டியலில் முன்னிலையைப் பெற்றதுடன், இந்தப் போட்டியில் இந்தியா வென்ற அதிகபட்ச தங்கப் பதக்க எண்ணிக்கை இதுவாகும்.
இந்தியா 26 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் உட்பட மொத்தம் 99 பதக்கங்களுடன் கஜகஸ்தான் மற்றும் சீனாவை விட முன்னேறியுள்ளது.
ஆடவருக்கான டபுள் டிராப் போட்டியில் அங்கூர் மிட்டல் உலக சாதனைப் படைத்தார்; என்பதோடு அவரது ஆசிய சாதனையுடன் இளவேனில் வாளரிவன் தனது இரண்டாவது ஆசியப் பட்டத்தை வென்றார்.