TNPSC Thervupettagam

ஆசிய-பசிபிக் அஞ்சல் ஒன்றியம் - வினய பிரகாஷ் சிங்

September 12 , 2026 7 hrs 0 min 48 0
  • இந்திய அஞ்சல் சேவையின் (IPoS) மூத்த அதிகாரியான வினய பிரகாஷ் சிங், ஆசிய-பசிபிக் அஞ்சல் ஒன்றியத்தின் (APPU) பொதுச் செயலாளராக இரண்டாவது நான்கு ஆண்டு பதவிக் காலத்திற்கு (2027-2030) போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • APPU என்பது 32 ஆசிய-பசிபிக் நாடுகளின் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும், மேலும் இது உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தின் (UPU) கீழ் உள்ள ஒரு பிராந்திய ஒன்றியமாகும்.
  • இது தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது, மேலும் உறுப்பு நாடுகளிடையே அஞ்சல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • APPU 1962 ஆம் ஆண்டில் ஆசிய-ஓசியானிக் அஞ்சல் ஒன்றியமாக (AOPU) உருவாகி, 1981 ஆம் ஆண்டில் APPU என மாறியது.
  • இது அப்பிராந்தியத்தில் அஞ்சல் ஒத்துழைப்பு, எல்லை தாண்டிய தளவாடங்கள், மின்-வணிகம் மற்றும் தொழில்நுட்பத் திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்