ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு 2022
December 15 , 2022 868 days 413 0
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டினைத் தாய்லாந்து ஏற்பாடு செய்தது.
ஆசிய-பசிபிக் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கோரிக்கையினை முன் வைத்ததோடு, அந்த பிராந்தியத்தினைச் சேர்ந்த நாடுகளின் நிலையான மேம்பாட்டினை நோக்கி அவற்றை வழி நடத்திச் செல்வதற்கு உறுதியளித்தனர்.
ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டினை நடத்தும் தாய்லாந்து நாட்டிடமிருந்து "சாலோம்" என்ற மூங்கில் கூடையினை ஒப்படைப்புப் பரிசாக கமலா ஹாரிஸ் (அமெரிக்கா) பெற்றார்.
அடுத்த ஆண்டிற்கான இந்த உச்சி மாநாட்டை அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோ நகரில் நடத்தவுள்ளது.
ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் உலகின் ஒவ்வொரு 10 பேரில் கிட்டத்தட்ட நான்கு பேரையும் மற்றும் உலக வர்த்தகத்தில் கிட்டத் தட்ட பாதி அளவினையும் கொண்டுள்ளது.