ஆசிய மகளிர் குத்துச் சண்டை – சாம்பியன் ஷிப் – 2017
November 9 , 2017 2732 days 998 0
ஐந்து முறை உலகச் சாம்பியனும் ஒலிம்பிக் வெண்கலப் பதக்க வீராங்கனையுமான மேரி கோம், வியட்நாமின் ஹோசிமின் நகரத்தில் நடைபெற்ற ஆசிய மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 48 கிலோ எடைப்பிரிவில் தனது ஐந்தாவது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
உலகச் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனையான சோனியா, சீனாவின் யின் ஜுன்ஹீவாவிடம் தோல்வி அடைந்து 57 கிலோ எடைப்பிரிவில் இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கததை வென்றார்.
ஆசிய கண்டத்திற்கான இந்த குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தது.
மேரி கோம் 2014 ஆம் ஆண்டின் ஆசிய குத்துச் சண்டை போட்டிக்கு பிறகு இது அவர் பெரும் முதல் சர்வதேச தங்கப்பதக்கமாகும்.
குத்துச் சண்டை விளையாட்டிற்கு மேரி கோமின் சிறந்த பங்களிப்பிற்காக இவருக்கு பத்ம பூஷண் (2013), பத்ம ஸ்ரீ (2010) மற்றும் குத்துச் சண்டைக்கான அர்ஜீனா விருது (2003) போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.