ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018 - டாடா ஸ்டீல் (அதிகாரப்பூர்வ பங்குதாரர்)
November 12 , 2018 2587 days 948 0
2018 ஆம் ஆண்டின் ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியின் அதிகாரப்பூர்வ பங்குதாரராக ‘டாடா ஸ்டீல்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒடிசாவில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடக்கவிருக்கும் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் உலகக் கோப்பைப் போட்டியின் 14வது பதிப்பானது 3வது முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது.
இதற்கு முன்னதாக இந்தியாவானது இப்போட்டியினை 1982ல் மும்பையிலும் 2010ல் புதுடெல்லியிலும் நடத்தியது.
இந்தியாவில் ஹாக்கி அகாடமி (பயிற்சி நிறுவனம்) தொடங்கியிருக்கின்ற முதல் தனியார் துறை நிறுவனமாக டாடா ஸ்டீல் உள்ளது.