ஆண்டின் சிறந்த வணிகப் புத்தகத்திற்கான சர்வதேச விருது – 2021
June 4 , 2021 1522 days 777 0
நிதின் ராகேஷ் மற்றும் ஜெரீ விண்ட் ஆகிய எழுத்தாளர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான “ஆண்டின் சிறந்த வணிகப் புத்தகத்திற்கான” சர்வதேச விருதினை வென்றுள்ளனர்.
நோஷன் பிரஸ் என்ற பதிப்பகத்தினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட‘Transformation in times of crisis’ எனும் புத்தகத்திற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டின் சிறந்த தொழில்நுட்பப் புத்தாக்கத்திற்காக கோல்டு ஸ்டீவி விருது பெற்ற எழுத்தாளர் நிதின் ராகேஷ் அவர்கள், 2017 ஆம் ஆண்டு முதல் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான mphasis என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
இப்புத்தகத்தின் இணை ஆசிரியர் ஜெர்ரி விண்ட் அவர்கள் சர்வதேச அளவில் ஒரு புகழ்பெற்ற கல்வியாளர் ஆவார்.