ஆதாரால் செயல்படுத்தப்பட்ட கட்டண முறைமை சேவைகள்: இந்திய அஞ்சலக பண வழங்கீட்டு வங்கி
September 10 , 2019 2168 days 707 0
இந்திய அஞ்சலக பண வழங்கீட்டு வங்கியால் (India Post Payments Bank - IPPB) நடைமுறைப் படுத்தப்படுகின்ற ஆதாரால் செயல்படுத்தப்பட்ட கட்டண முறைமை சேவைகளை அதிகாரப் பூர்வமாக வெளியிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
எந்தவொரு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் வங்கிச் சேவைகளை வங்கிகளுக்கு இடையே மாற்றி அளிக்கக் கூடிய வகையில் வழங்குவதற்கான நாட்டின் மிகப்பெரிய ஒற்றைத் தளமாக IPPB உருவெடுத்துள்ளது.
தபால் நிலையங்களின் விரிவான தொலைதூர இணைப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
இதுபற்றி
IPPB என்பது மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் 100% அரசுக்கு சொந்தமான பண வழங்கீட்டு வங்கி ஆகும்.
இது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று நிறுவப்பட்டது.