TNPSC Thervupettagam

ஆதி சமஸ்கிருதம்

September 15 , 2025 7 days 60 0
  • பழங்குடியின விவகார அமைச்சகம் ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியன்று ஆதி சமஸ்கிருத டிஜிட்டல் கற்றல் தளத்தின் பீட்டா வடிவினை அறிமுகப் படுத்தியது.
  • ஆதி சமஸ்கிருதம் ஆனது பழங்குடியினரின் கலை வடிவங்களைப் பாதுகாத்தல், வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் உலகளவில் பழங்குடியின சமூகங்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தளமானது பழங்குடியினக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் என்று விவரிக்கப் படுகிறது.
  • ஆதி சமஸ்கிருதம் ஆதி விஸ்வ வித்யாலயா, ஆதி சம்பதா மற்றும் ஆதி ஹாத் எனப்படும் மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.
  • ஆதி விஸ்வ வித்யாலயா பழங்குடியினர் நடனம், ஓவியம், இசை, கைவினைப் பொருட்கள் மற்றும் நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் 45 உள்ளார்ந்தப் படிப்புகளை வழங்குகிறது.
  • ஆதி சம்பதா என்பது பழங்குடியினரின் கலை, ஜவுளி, கலைப் பொருட்கள் மற்றும் கலாச்சாரத்தை உள்ளடக்கிய 5,000 க்கும் மேற்பட்ட தொகுக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்ட ஒரு டிஜிட்டல் களஞ்சியமாகும்.
  • ஆதி ஹாத் என்பது பழங்குடியினரின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (TRIFED) உடன் இணைக்கப்பட்ட ஒரு இணைய வணிக தளமாகும்.
  • இந்த முன்னெடுப்பு ஆனது 15 மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் (TRI) இணைந்து உருவாக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்