TNPSC Thervupettagam
September 5 , 2025 9 days 61 0
  • பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஆனது, செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மொழிபெயர்ப்புச் செயலியான ஆதி வாணியின் பீட்டா வடிவத்தினை 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தியது.
  • இந்தச் செயலியானது, பிலி, முண்டாரி, கோண்டி, சந்தாலி, குய் மற்றும் காரோ ஆகிய ஆறு ஆதிவாசி மொழிகளை இந்தி மற்றும் ஆங்கில மொழிக்கு மொழிபெயர்க்கிறது.
  • டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், BITS பிலானி மற்றும் ஐதராபாத் மற்றும் நயா ராய்ப்பூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IIIT) ஆகியவற்றுடன் இணைந்து ஆதி வாணி உருவாக்கப்பட்டது.
  • ஒரு லட்சம் பழங்குடியினக் கிராமங்களில் 20 லட்சம் தன்னார்வலர்கள் மற்றும் அதிகாரிகளை இலக்காகக் கொண்டு ஆதி கர்மயோகி திறன் மேம்பாட்டு முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்தச் செயலி தேசிய அளவில் சோதிக்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்