இறுதி நிதித் தொகுப்பு மீதான அறிவிப்புடன் சேர்த்து, அனைத்து நிதித் தொகுப்பினாலும் சேர்த்து வழங்கப் பட்ட ஒட்டுமொத்த ஊக்கத் தொகை ரூ. 20,97,053 கோடியாகும்.
சுகாதாரம்
எதிர்கால நோய்த் தொற்றுச் சிகிச்சைகளுக்காக இந்தியாவைத் தயார்படுத்துதல்.
மத்திய அரசு அனைத்து மாவட்டங்களிலும் நோய்த் தொற்றுச் சிகிச்சைக்கு வேண்டிய மருத்துவமனை வளாகங்களை அமைக்க இருக்கின்றது.
மாவட்டங்களில் ஒருங்கிணைந்தப் பொதுச் சுகாதார ஆய்வகங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
சுகாதாரத்திற்கான தேசிய நிறுவனத் தளமானது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தினால் தொடங்கப்பட இருக்கின்றது.
தேசிய டிஜிட்டல் சுகாதார செயல்திட்டமானது செயல்படுத்தப்பட இருக்கின்றது.
கல்வி
பிரதான் மந்திரி eVIDYA – டிஜிட்டல்/நிகழ்நேரக் கல்வியை பல நிலைகளில் அணுகுவதற்கான ஒரு திட்டமானது உடனடியாகத் தொடங்கப்பட இருக்கின்றது.
இது ஆன்லைன் (நிகழ்நேர) கல்வி தொடர்பான முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்காகத் தொடங்கப்பட இருக்கின்றது.
இது “ஒரு தேசம் ஒரு டிஜிட்டல் தளம்” மற்றும் “ஒரு வகுப்பு ஒரு அலைவரிசை” என்ற 2 முக்கியமான முன்னெடுப்புகளை உள்ளடக்கவுள்ளது.
மனோதர்பன் : மனநல மற்றும் உணர்ச்சி நலம் ஆகியவற்றிற்காக மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்கள் ஆகியோர்களுக்கு உளவியல் ரீதியிலான சமூக உதவியைக் கொடுப்பதற்கான ஒரு முன்னெடுப்பானது விரைவில் தொடங்கப்பட இருக்கின்றது.
2025 ஆம் ஆண்டுவாக்கில் ஒவ்வொரு குழந்தையும் 5ஆம் வகுப்பு நிலையில் (5வது கிரேடு) கற்றல் நிலைகள் மற்றும் சிறந்த விளைவுகளை எட்டுவதை உறுதி செய்வதற்காக தேசிய அடித்தள கல்வியறிவு மற்றும் எண்ணறிவுத் திட்டமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட இருக்கின்றது.
மாநில நிதி நிலைகள்
2020-21 ஆம் ஆண்டிற்கான மாநிலங்களின் கடன் வாங்குவதற்கான நிகர உச்ச வரம்பு ரூ.6.41 இலட்சம் கோடியாகும். இது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3% என்ற விகிதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
தற்பொழுது மாநிலங்களின் கடன் வாங்கும் வரம்பானது 2020-21 ஆம் ஆண்டில் 3%லிருந்து 5% ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
கடன் வாங்குதலின் ஒரு பகுதியானது குறிப்பிட்ட சில சீர்திருத்தங்களுடன் இணைக்கப்பட இருக்கின்றது.
தேசிய அளவிலான “ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டை”, எளிதில் தொழில் தொடங்குவதை மேம்படுத்துதல், மின் விநியோகச் சீர்திருத்தங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி வருவாய்களைச் சீரமைத்தல் ஆகியவை இந்த சீர்திருத்தங்களாகும்.
பொதுத் துறை நிறுவனங்கள் (PSEs)
பொது நலன் கருதி PSEகளின் (Public Sector Enterprises) இருப்பு தேவைப்படும் உத்திசார் துறைகளைக் கொண்ட ஒரு பட்டியலானது அறிவிக்கப்பட இருக்கின்றது.
உத்திசார் துறைகளில், குறைந்தது ஒரு நிறுவனம் பொதுத் துறையாகவே இருக்கும். தனியார் துறையும் இதில் அனுமதிக்கப்பட இருக்கின்றது.
இதர அறிவிப்புகள்
சுயம் பிரபா டிடிஎச் (DTH – Direct To Home) அலைவரிசைகளானது இணைய வசதியைப் பெறாதவர்களை அணுகுவதற்காக மற்றும் அவர்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட இருக்கின்றது.