ஆத்மநிர்பர் பிரச்சாரம் – நான்காவது நிதித் தொகுப்பு
May 20 , 2020 1944 days 847 0
இந்திய அரசானது 8 துறைகளில் கொள்கை சார்ந்த சீர்திருத்தங்களைக் கொண்டு வர இருக்கின்றது.
வணிக ரீதியிலான சுரங்கப் பணியானது நிலக்கரித் துறையில் கொண்டு வரப்பட இருக்கின்றது.
உலகளவில் இந்தியா மூன்றாவது மிகப்பெரிய நிலக்கரி இருப்புகளைக் கொண்டிருந்த போதிலும் இந்தியா தற்பொழுதும் நிலக்கரியை இறக்குமதி செய்து வருகின்றது.
நிலக்கரியின் வணிகமயமாக்கலானது நிலக்கரி இறக்குமதியைக் குறைக்க இருக்கின்றது.
மத்திய தாதுக்கள் துறை அமைச்சகமானது தாதுக் குறியீட்டை வெளியிட இருக்கின்றது.
பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடானது 49%லிருந்து 74% ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது.
ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட இருக்கின்றன.
மத்திய அரசானது மருத்துவ ஐசோடோப்புகளை உருவாக்குவதற்காக பொது-தனியார் பங்களிப்பு முறையில் ஒரு ஆராய்ச்சி அலகை ஏற்படுத்த இருக்கின்றது.
மத்திய அரசானது இந்தியாவை விமானத்தின் பராமரிப்பு, பழுது பார்த்தல், முழுவதும் சரி செய்தல் (MRO - Maintenance, repair and overhaul of aircraft) என்ற ஒரு மையமாக மாற்ற இருக்கின்றது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான விமானங்கள் தங்களது பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் பணிகளுக்காக வெளிநாட்டிற்குச் செல்கின்றன.