இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு நிறுவனமானது வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள 75 இந்தியத் தூதரகங்களில் ஆத்ம நிர்பர் பாரத் முனையங்களை அமைத்து வருகிறது.
முதலாவது ஆத்ம நிர்பர் பாரத் முனையமானது தாய்லாந்தில் உள்ள பாங்காக் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
75 நாடுகளில் ஜமைக்கா, அயர்லாந்து, துருக்கி, கென்யா, மங்கோலியா, இஸ்ரேல், பின்லாந்து, பிரான்சு மற்றும் கனடா, சிங்கப்பூர், ரஷ்யா, அமெரிக்கா, இந்தோனேசியா, கிரேக்கம் மற்றும் சைப்ரஸ் ஆகியவை அடங்கும்.