TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேசத்தில் இலவசக் கல்விப் பயன்பாட்டுப் பொருள் தொகுப்புகள்

July 10 , 2025 2 days 39 0
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது, 'சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வித்யார்த்தி மித்ரா தொகுப்புகள்' திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்தத் திட்டமானது, 2025–26 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசக் கல்வித் தொகுப்புகளை வழங்குவதற்கானதாகும்.
  • சீருடைகள், காலணிகள், இடுப்புப் பட்டைகள், காலுறைகள், பள்ளிப் பைகள், பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் அகராதிகள் ஆகியவை இந்தத் தொகுப்பில் அடங்கும்.
  • இந்தத் திட்டமானது முந்தைய ஜகனன்னா வித்யா கனுக்கா தொகுப்பு வழங்கீட்டுத் திட்டத்திற்கு மாற்றாக அமைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்