ஆந்திரப் பிரதேசத்தில் இலவசக் கல்விப் பயன்பாட்டுப் பொருள் தொகுப்புகள்
July 10 , 2025 17 days 59 0
ஆந்திரப் பிரதேச மாநில அரசானது, 'சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வித்யார்த்தி மித்ரா தொகுப்புகள்' திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்தத் திட்டமானது, 2025–26 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசக் கல்வித் தொகுப்புகளை வழங்குவதற்கானதாகும்.
சீருடைகள், காலணிகள், இடுப்புப் பட்டைகள், காலுறைகள், பள்ளிப் பைகள், பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் அகராதிகள் ஆகியவை இந்தத் தொகுப்பில் அடங்கும்.
இந்தத் திட்டமானது முந்தைய ஜகனன்னா வித்யா கனுக்கா தொகுப்பு வழங்கீட்டுத் திட்டத்திற்கு மாற்றாக அமைகிறது.