TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேசத்தில் சதுப்பு நிலக்காடுகள் மறுசீரமைப்பு

July 31 , 2026 13 hrs 0 min 22 0
  • மிஷ்டி (MISHTI) திட்டத்தின் கீழ் சதுப்பு நிலக்காடுகளை மீட்டெடுப்பதில் இந்திய மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
  • 2025-26 ஆம் ஆண்டில் ₹18.04 கோடி முதலீட்டில் 2,047.70 ஹெக்டேர் அளவிலான சதுப்பு நிலக்காடுகளை மாநில அரசு மீட்டுள்ளது.
  • கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பல்லுயிர்த் தன்மையை வலுப்படுத்த, ஆந்திரப் பிரதேசத்தின் பெரிய பசுமைச் சுவர் முன்னெடுப்பின் கீழ் சதுப்பு நிலக்காடுகளின் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • ஓத நீரின் ஓட்டத்தை மேம்படுத்தவும், சதுப்பு நிலக்காட்டின் மரங்களின் உயிர் வாழ்வை அதிகரிக்கவும் மற்றும் சுற்றுச்சூழல் மீள்திறனை மேம்படுத்தவும் வனத் துறை மீன் எலும்புத் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.
  • 2026-27 ஆம் ஆண்டிற்கு, மாநிலம் முழுவதும் 1,618 ஹெக்டேர் சதுப்பு நிலக்காடுச் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்க ஆந்திரப் பிரதேசம் இலக்கு நிர்ணயித்து உள்ளது.
  • மிஷ்டி திட்டமானது சதுப்பு நிலக்காடுகளை வளர்த்தல், கடலோர சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுத்தல், பருவநிலையைத் தாங்கும் திறன் மற்றும் கடலோரப் பகுதிகளில் நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்