ஆந்திரப் பிரதேசத்திற்கு என்று தனியாக ஒரு உயர் நீதிமன்றம் செயல்படுவதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் இசைவு தெரிவித்துள்ளது. இந்த உயர் நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்படவிருக்கிறது.
நாட்டின் 25வது உயர்நீதிமன்றமாக இந்த உயர் நீதிமன்றம் விளங்கும்.
ஆந்திரப் பிரதேச மாநிலத் தலைநகரான அமராவதியில் உயர்நீதிமன்றத்தின் நிரந்தரத் தலைமையிடம் அமைக்கும் வரை தற்காலிக கட்டிடத்தில் இந்த உயர் நீதிமன்றம் செயல்படும்.
2014 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதி இரு மாநிலங்களும் பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திரப் பிரதேசமும் தெலுங்கானாவும் பொதுவான ஹைதராபாத்தில் அமைந்திருந்த உயர் நீதிமன்றம் ஒன்றை கொண்டு இருந்தது.
தற்பொழுது செயல்பட்டு வரும் உயர் நீதிமன்றம் அடுத்த ஆண்டு முதல் தெலுங்கானா உயர் நீதிமன்றம் என்று அழைக்கப்படும்.