TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேச அமைச்சரவை

June 9 , 2019 2249 days 765 0
  • ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் YS. ஜெகன் மோகன் ரெட்டி, தனது அமைச்சரவையில் 5 துணை முதல்வர்களை சேர்த்துள்ளார்.
  • இது நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான துணை முதல்வர்களைக் கொண்டுள்ளது என்று நம்பப் படுகின்றது.
  • இவர்கள் அந்த மாநிலத்தின் முக்கியமான சமுதாயக் குழுக்களிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவையாவன : எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் காப்பு சமூகத்தினர்.
  • அவர்களாவன
பெயர் சமூகப் பிரிவு அமைச்சகம் தொகுதி
அம்சத் பாட்ஷா சிறுபான்மையினர் சிறுபான்மையினர் நலத்துறை கடப்பா
புஸ்பஸ்ரேவாணி பமுலா பழங்குடியினர் பழங்குடியினர் நலத்துறை குருப்பம்
நாராயணசாமி பட்டியலிடப்பட்ட வகுப்பினர் உற்பத்தி மற்றும் வணிக வரி கங்காதர நெல்லூர்
அலா கிருஷ்ணா ஸ்ரீனிவாஸ் காப்பு சமூகத்தினர் சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் மருத்துவக் கல்வி எல்லூரு
பில்லி சுபாஷ் சந்திர போஸ் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் வருவாய், பதிவுத் துறை, முத்திரை சட்டசபை (மேலவை) உறுப்பினர்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்