ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தங்கமயில் விருது பெற்றார்
October 28 , 2017 2841 days 1088 0
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “பொது சேவை மற்றும் பொருளாதார மாற்றம் ஆகியவை மீதான சர்வதேச தலைமை” எனும் பிரிவின் கீழ் தங்கமயில் விருதினை பெற்றார். இது இலண்டனில் நடைபெற்ற 17 வது லண்டன் சர்வதேச மாநாட்டில் வழங்கப்பட்டது.
தங்கமயில் விருது (Institute of Directors - IOD) 1991-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது கார்ப்பரேட் துறையில் சிறந்த பணியாற்றிமைக்காக வழங்கப்பட்டு வருகிறது.
சந்திரபாபு நாயுடுவின் மனைவியும், ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான நாரா புவனேஸ்வரியும், கார்பரேட் நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மை எனும் பிரிவில் விருது பெற்றார்.