"ஆபத்தில் உள்ள" உலகப் பாரம்பரியத் தளங்கள் பட்டியல் 2025
July 14 , 2025 13 days 66 0
உலகப் பாரம்பரியக் குழுவானது, மடகாஸ்கர், எகிப்து மற்றும் லிபியாவில் உள்ள மூன்று ஆப்பிரிக்கப் பாரம்பரியத் தளங்களை யுனெஸ்கோ அமைப்பின் அழிந்து வரும் தளங்களின் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
அந்தத் தளங்கள் மடகாஸ்கரில் உள்ள அட்சினானானாவின் மழைக் காடுகள், எகிப்தில் அபு மேனா மற்றும் லிபியாவில் உள்ள பழைய நகரம் ஆகியனவாகும்.
உலகப் பாரம்பரியப் பட்டியலில், ஓர் இடத்தினைச் சேர்க்க வழி வகுத்த மதிப்புகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தத் தகவல்களை வழங்குவதும், அந்த தளத்தைப் பாதுகாப்பதற்கென சர்வதேசச் சமூகத்தை அணி திரட்டுவதும் ஆபத்து நிலையில் உள்ள தளங்கள் பட்டியலின் நோக்கமாகும்.
இது யுனெஸ்கோ அமைப்பின் தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவை மிகவும் அதிளவில் பெறுவதற்கான உரிமை மூலம் அந்தத் தளம் பயனடைய உதவுகிறது.