ஆபரேஷன் மை சஹேலி (Operation My Saheli)
October 5 , 2020
1765 days
752
- தென்கிழக்கு இரயில்வேயானது “ஆபரேஷன் மை சஹேலி” என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
- இரயிலில் பெண் பயணிகள் ஏறுமிடத்திலிருந்து இறங்குமிடம் வரை அவர்களது பாதுகாப்பை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 18, முதல் 3 இரயில்களில் “ஆபரேஷன் மை சஹேலி” திட்டத்தின் சோதனைப் பதிப்பானது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அவை
- ஹவுரா - யஸ்வந்த்பூர் துரந்தோ சிறப்பு இரயில்,
- ஹவுரா - அகமதாபாத் சிறப்பு இரயில் மற்றும்
- ஹவுரா - மும்பை சிறப்பு இரயில்.
- இது "நிர்பயா நிதியத்தின்" கட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்படுகிறது, இதற்காக கூடுதல் செலவுகள் எதுவும் இரயில்வேயின் தலைமை நிர்வாகத்தால் வழங்கப் படவில்லை.

Post Views:
752