கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதோடு இது முதன்மையாக குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் பாதிப்பினை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்தியா மருந்துகள் மற்றும் சுகாதாரக் கருவிகள் உட்பட 21 டன் நிவாரண உதவிகளை அனுப்பியது.
கண்டத் தட்டுகளின் (டெக்டோனிக்) எல்லைகளில் அமைந்திருப்பது மற்றும் அந்த நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் காணப்படும் எளிதில் பிளவுப்படக் கூடிய கட்டுமானப் பொருட்களின் மிகப் பரவலான பயன்பாடு காரணமாக ஆப்கானிஸ்தான் பூகம்பங்களுக்கு எளிதில் ஆளாகக் கூடியதாக உள்ளது.