2025 ஆம் ஆண்டில் பகுப்பாய்வு செய்யப்பட்ட புதிய காந்தத் தரவு ஆனது, ஆப்பிரிக்கா இரண்டு நிலப்பரப்புகளாகப் பிரிவதற்கு வழி வகுக்கும் அஃபார் பிராந்தியத்தில் தொடர்ச்சியான மேலோடு பிரிப்புக்கான வலுவான ஆதாரங்களைக் காட்டுகிறது.
அஃபார் பிராந்தியம் என்பது பிரதான எத்தியோப்பியன் பிளவு, செங்கடல் பிளவு மற்றும் ஏடன் வளைகுடா பிளவு ஆகியவை சந்திக்கும் முச்சந்தியாகும்.
1960 ஆம் ஆண்டுகளில் மறுபரிசீலனை செய்யப்பட்ட காந்தத் தரவுகள் ஆனது, ஆப்பிரிக்காவிற்கும் அரேபியாவிற்கும் இடையில் கடந்த கால கடல் தள விரிவினைக் காட்டுகிறது.
கண்ட மேலோடு நீண்டு மெலிந்து வருவதால் கிழக்கு ஆப்பிரிக்க பிளவு என்பது விரிவடைகிறது.
கண்டப் பிளவு வட கிழக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்கிறது.
சுமார் 5–10 மில்லியன் ஆண்டுகளில் ஒரு புதிய கடல் படுகை உருவாகக் கூடும் என்று அறிவியலாளர்கள் மதிப்பிடுகின்றனர்.