TNPSC Thervupettagam

ஆப்பிரிக்க சுகாதாரப் பணியாளர்கள் திட்டம் 2035

September 1 , 2026 16 days 86 0
  • 2035 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 3 மில்லியன் சுகாதாரப் பணியாளர்களைச் சேர்க்கும் நோக்கத்துடன், ஆப்பிரிக்க சுகாதாரப் பணியாளர் செயல்திட்டம் 2026–2035 ஐ ஆப்பிரிக்க சுகாதார அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனர்.
  • சிறந்த திட்டமிடல், பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் பணியாளர்களைத் தக்கவைத்தல் ஆகியவற்றின் மூலம் கணிக்கப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக் குறையை பாதியாகக் குறைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் 5.72 மில்லியன் சுகாதாரப் பணியாளர்கள் இருந்தனர் அதே நேரத்தில் குறைந்தது 943,000 பயிற்சி பெற்ற சுகாதார நிபுணர்கள் வேலையில்லாமல் இருந்தனர்.
  • இத்திட்டமானது "திட்டமிடு, பயிற்றுவி மற்றும் தக்கவை" என்ற அணுகுமுறையைப் பின்பற்றுகிறது என்பதோடு இது பணியாளர் திட்டமிடல், தரமான கல்வி, வேலை உருவாக்கம் மற்றும் சிறந்த பணி நிலைமைகளில் கவனம் செலுத்துகிறது.
  • 2035 ஆம் ஆண்டுக்குள், 10,000 பேருக்கு 27 ஆக இருக்கும் சுகாதார நிபுணர்களின் அடர்த்தியை 47 ஆக உயர்த்தவும், சராசரி வேலையின்மை விகிதத்தை 27 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாகக் குறைக்கவும் இது இலக்கு வைத்துள்ளது.
  • அடிஸ் அபாபாவில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆப்பிரிக்காவுக்கான பிராந்தியக் குழுவின் 76வது அமர்வில் இந்தச் செயல்திட்டம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்