ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்களின் கட்சித் தாவல் விவகாரம்
April 27 , 2026 122 days 188 0
ஆம் ஆத்மி கட்சியின் (AAP) பலத்தில் மூன்றில் இரண்டு பங்கை விட அதிகமான ஏழு மாநிலங்களவையைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) தாவியுள்ளனர்.
இந்த நடவடிக்கையை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறியுள்ள ஆம் ஆத்மி கட்சி, அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரவுள்ளது.
அக்கட்சி, இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையைச் சுட்டிக்காட்டியது; இவ்வட்டவணையானது பிளவுகளை அங்கீகரிப்பதில்லை என்பதோடு, மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நடைபெறும் இணைப்புகளை மட்டுமே அனுமதிக்கிறது.
தகுதி நீக்கம் குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம் மாநிலங்களவைத் தலைவரிடம் (இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்) உள்ளது.
1985 ஆம் ஆண்டின் 52-வது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட கட்சித் தாவல் தடைச் சட்டமானது அரசியல் கட்சி உறுப்பினர்களின் தாவல்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது; தானாக முன்வந்து கட்சி உறுப்பினர் பதவியைத் துறப்பது அல்லது கட்சியின் கொறடா உத்தரவை மீறுவது ஆகிய காரணங்களுக்காக உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.