இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் வரும் பகுதிகளைக் குறைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அந்தப் பாதிக்கப்பட்ட மாநிலங்களாவன; அசாம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகியனவாகும்.
நாடு முழுவதும் உள்ள, மோதல்களால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் ஒரு நோக்கத்துடன் 1958 ஆம் ஆண்டில் இந்தச் சட்டமானது இயற்றப்பட்டது.
அசாம் மாநிலத்தில் உள்ள 23 மாவட்டங்களில் இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு, ஒரு மாவட்டத்தில் மட்டும் பகுதியளவில் விதிக்கப்படும்.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 6 மாவட்டங்களிலுள்ள 15 காவல்நிலையங்களில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழான அதிகாரங்கள் விலக்கப்படும்.
இந்த மாநிலத்திலுள்ள மற்றுமொரு மாவட்டத்தில் உள்ள இரு காவல் நிலையங்களின் அதிகார வரம்போடு 3 மாவட்டங்களில் மட்டும் இச்சட்டம் செல்லுபடியாகும்.
நாகாலாந்து மாநிலத்தின் 7 மாவட்டங்களிலுள்ள 15 காவல் நிலையங்களில் இந்தச் சட்டத்தின் கீழான அதிகார வரம்புகள் விலக்கப்படும்.