ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனமானது (Stockholm International Peace Research Institute – SIPRI) ஆயுத விற்பனைகள் பற்றிய புதிய தரவினைவெளியிட்டு உள்ளது.
2020 ஆம் ஆண்டு பெருந்தொற்றின் காரணமாக ஆயுதத் தொழில்துறை பெரிதும் பாதிக்கப் படவில்லை என SIPRI தரவுகள் கூறுகின்றன.
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆயுத விற்பனையானது 1.3% அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் ஆயுத விற்பனையானது 17% என்ற அளவிற்கு அதிகரித்து உள்ளதனால் ஆயுதத் தொழில் துறையில் உள்ள 100 பெரிய நிறுவனங்களின் ஆயுத விற்பனை தொடர்ச்சியாக 6வது ஆண்டாக வளர்ச்சியினைக் கண்டுள்ளதாக SIPRI தரவுகள் கூறுகின்றன.
இது ஏனெனில் 2015 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்கள் குறித்த தரவுகளை SIPRI முதன்முறையாக சேர்த்ததிலிருந்து உள்ள விற்பனையுடன் ஒப்பிடுகையில் ஏற்பட்டது ஆகும்.
ஆயுத விற்பனையில் முதல் 100 இடங்களில் இடம்பெற்ற அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களை அமெரிக்கா கொண்டுள்ளதாக SIPRI தரவுகள் கூறுகின்றன.
அமெரிக்காவை அடுத்து சீன நிறுவனங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.