TNPSC Thervupettagam

ஆயுர்வேதம் மீதான நிதி ஆயோக்கின் வழிகாட்டுதல் வரைபடம்

July 7 , 2026 7 hrs 0 min 22 0
  • ஆயுர்வேதத்தின் உலகளாவிய வீச்சை 2025 முதல் 2047 ஆம் ஆண்டு வரை விரிவுபடுத்துவதற்காக "ஆயுர்வேதத்தை உலகமயமாக்குவதற்கான உத்திசார் செயல் வரைபடத்தை" நிதி ஆயோக் வெளியிட்டது.
  • ஆயுர்வேத ஏற்றுமதி 1.09 பில்லியன் அமெரிக்க டாலரில் (2014) இருந்து 2.16 பில்லியன் அமெரிக்க டாலராக (2023) அதிகரித்துள்ளது என்பதோடு மேலும் இது தற்போது சுமார் 150 நாடுகளை சென்றடைகிறது.
  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி (ASU) ஆகியவற்றை சர்வதேச நோய்கள் வகைப்பாடு (ICD-11) மற்றும் சர்வதேச சுகாதார தலையீடுகளின் வகைப்பாடு (ICHI) ஆகியவற்றில் சேர்த்துள்ளது.
  • உலகளாவிய ஆயுர்வேதப் பதிவேடு (GAR), உலக சுகாதார அமைப்பு-சிறந்த உற்பத்தி நடைமுறைகள் (WHO-GMP) சான்றிதழ், சர்வதேச கல்வி, ஆராய்ச்சி மற்றும் மருத்துவ மதிப்பு பயண (MVT) மையங்கள் ஆகியவற்றை இந்த வரைபடம் முன்மொழிகிறது.
  • 2047-ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 20 தேசிய சுகாதார அமைப்புகளில் ஆயுர்வேதத்திற்கான அங்கீகாரத்தை பெறுவதையும், 10 நாடுகளில் அதற்கான காப்பீட்டுப் பாதுகாப்பை அடைவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்