இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது ஆயுஷ் அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து ஆயுர்வேத ஆஹாரா தயாரிப்புகளின் உறுதியான பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியல் ஆனது 2022 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆயுர்வேத ஆஹாரா விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது.
A அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள செவ்வியல் ஆயுர்வேத நூல்களிலிருந்து இந்த சூத்திரங்கள் எடுக்கப்பட்டு B அட்டவணையின் முதல் குறிப்பின் கீழ் வெளியிடப்பட்டு உள்ளன.
ஆயுர்வேத ஆஹாரா பொருட்களை உற்பத்தி செய்வதற்கான நம்பகமான குறிப்புடன் உணவு வணிக நிறுவனங்களுக்கு உதவுவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.