TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் உடன் CGHS இணைப்பு

January 27 , 2023 937 days 509 0
  • ஆயுஷ்மான் பாரத் மற்றும்  மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS), அரசாங்கத்தால் நடத்தப்படும் இரண்டு தனித்தனி மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் ஆகும்.
  • ஆயுஷ்மான் பாரத் வரம்பின் கீழ் தற்போதுள்ள அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • ஆயுஷ்மான் பாரத் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டம் 10.74 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்களின் சுமார் 50 கோடி மக்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் அளவிற்குச் சுகாதாரக் காப்பீட்டினை வழங்குகிறது.
  • இது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைகளில் பராமரிப்பு மருத்துவமனைச் சேவையை உள்ளடக்கியது.
  • மத்திய அரசின் சுகாதாரத் திட்டமானது (CGHS) அதன் கீழ் பதிவு செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரிவான மருத்துவச் சேவையை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்