ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா - SEHAT திட்டம்
May 1 , 2022 1193 days 1281 0
ஜம்மு கோட்டத்தின் சம்பா மாவட்டம் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (ABPMJAY) - SEHAT என்ற திட்டத்தின் கீழ் 100% குடும்பங்களையும் இணைத்த இந்தியாவின் முதல் மாவட்டமாக மாறியுள்ளது.
ABPMJAY SEHAT திட்டமானது, அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும்.
மேலும் இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் பதிவு செய்யப் பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் ஆயுஷ்மான் பாரத் கோல்டன் கார்டு (தங்க நிற அட்டை) உள்ளவர்கள் ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சையைப் பெறுவர்.