ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி – ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) செகாத் (SEHAT)
December 30 , 2020 1701 days 1133 0
பிரதமர் மோடி அவர்கள் ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி – ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY/Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana) செகாத் (SEHAT) என்ற திட்டத்தைத் தொடங்கவுள்ளார்.
SEHAT (Social, Endeavour for Health and Telemedicine) திட்டம் என்பது சுகாதாரம் மற்றும் தொலைதூர மருத்துவத்திற்கான சமூகம் மற்றும் முயற்சி என்பதைக் குறிக்கின்றது.
இந்தத் திட்டமானது அம்மாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சேர்க்கப் படாத ஒரு கோடி மக்களுக்குப் பயனளிக்க இருக்கிறது.
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமானது அனைவருக்குமான சுகாதார வசதியினை அளிக்க இருக்கும் முதல் ஒன்றியப் பிரதேசமாகும்.
இந்தத் திட்டமானது ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில் வாழும் அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் 1 குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் வரை இலவச சுகாதாரக் காப்பீட்டு வசதியை அளிக்கின்றது.
PMJAY ஆனது அரசினால் முழுவதும் நிதியளிக்கப் படும் வகையில் உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு/உறுதித் திட்டமாகும்.
இது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் ரூ.5,00,000 அளவிற்கு ஒரு காப்பீட்டை வழங்குகின்றது.
அதாவது இதனைக் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினராலோ அல்லது அனைத்து உறுப்பினர்களாலோப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை.