TNPSC Thervupettagam

ஆய்வகத்தில் உருவாக்கப்படும் பால்

December 11 , 2025 15 hrs 0 min 42 0
  • இஸ்ரேலில் உள்ள புத்தொழில் நிறுவனமானது, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆய்வகத்தில் உருவாக்கப்படும் "பசுவிலிருந்து பெறப்படாத" பாலை வணிக ரீதியாக அறிமுகப்படுத்த உள்ளது.
  • ஆய்வகத்தில் உருவாக்கப்படும் பால் என்பது உயிரித் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்திப் பசுக்கள் இல்லாமல் தயாரிக்கப்படும் உண்மையான பால் பொருள் ஆகும்.
  • இதில் பசுவின் பாலுக்கு ஒத்ததாக இருக்கின்ற கேசீன் மற்றும் வே புரதங்கள் உள்ளன என்பதோடு இது சீஸ், தயிர் மற்றும் யோகர்ட் ஆகியவற்றிற்கு ஏற்றதாக உள்ளது.
  • பால் உற்பத்தி செய்யும் மரபணுக்கள் பால் புரதங்களைச் சுரக்கும் நுண்ணுயிரிகளில் சேர்க்கப்பட்டு துல்லியமான நொதித்தல் மூலம் தயாரிக்கப்படுகிறது.
  • இந்தப் பால் லாக்டோஸ் இல்லாதது, கொழுப்பு இல்லாதது, ஹார்மோன் இல்லாதது, என்பதோடு ஊட்டச்சத்து ரீதியாக இது வழக்கமான பாலினை ஒத்திருக்கிறது மற்றும் கொழுப்பு அல்லது லாக்டோஸ் உள்ளடக்கத்திற்கு ஏற்ப தனிப் பயனாக்கக் கூடியது.
  • ஆய்வகத்தில் உருவாக்கப்படும் பால் ஆனது நெறிமுறை மற்றும் பருவநிலைக்கு ஏற்றது என்பதோடு விலங்குப் பயன்பாடு, மீத்தேன் வெளியேற்றம் மற்றும் சுற்றுச் சூழல் தாக்கத்தைக் குறைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்