ஆய்வகங்களில் விலங்குகளைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விலங்குகள் அல்லாத மாற்று வழிகளை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
நோய்கள் மற்றும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி, மருந்து பரிசோதனை மற்றும் அழகு சாதனப் பொருட்களின் உற்பத்தியில் ஆய்வக விலங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
எலிகள் போன்ற விலங்குகள் மனிதர்களுடன் 98%க்கும் மேற்பட்ட மரபணுக்களைப் (DNA) பகிர்ந்துகொள்வதால் அவை ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
விலங்குகளுக்குப் பதிலாக கணினி வழிமுறைகள், சில்லு-உறுப்புகள் மற்றும் மைக்ரோடோசிங் உத்திகள் ஆகியவை மாற்று முறைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.