கேரள மாநில அரசு ஆரளம் வனவிலங்கு சரணாலயத்தை அதிகாரப்பூர்வமாக ஆரளம் பட்டாம்பூச்சி சரணாலயம் எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது.
இது இம்மாநிலத்தில் உள்ள இந்தியாவின் முதல் பட்டாம்பூச்சி சரணாலயம் ஆகும்.
இந்த அறிவிப்பு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972ன் கீழ் வெளியிடப்பட்டது.
இந்தப் பிராந்தியம் பெரிய அளவிலான பட்டாம்பூச்சி இடம்பெயர்வு மற்றும் சேற்றுப் பள்ளம் ஆகியவற்றிக்குப் பெயர் பெற்றது என்பதோடு மேலும் இது அட்டவணை 1ல் உள்ள தேவாங்கின் ஒரு சிறப்பு வாழ்விடமாகவும் உள்ளது.
இது கர்நாடகாவில் உள்ள பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம், கொட்டியூர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் வடக்கு வயநாடு வனப் பிரிவு ஆகியவற்றுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.
கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான நதியான சீங்கண்ணி ஆறு, பிரம்மகிரி மலைத்தொடர்களில் உற்பத்தியாகி, ஆரளத்தின் அடர்ந்த காடுகளின் வழியாகப் பாய்கிறது.