ஆரவல்லி மலைகள் குறித்த மத்திய அரசின் புதிய வரையறையை இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த வரையறையின் கீழ், உள்ளூர் நிலப்பரப்பிற்கு மேல் 100 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட உயரமுள்ள நிலப்பரப்புகள் மட்டுமே ஆரவல்லி மலைகளாக சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்படுகின்றன.
இந்தத் தீர்ப்பு ஆனது இந்த உயர்ந்த மேலெழும்பும் நிலப்பரப்புகளில் சுரங்க ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பைக் கட்டுப்படுத்துகிறது.
ஆரவல்லியை காத்தல் பிரச்சாரம் என்பது இந்தக் குறுகிய வரையறையை எதிர்க்கும் குடிமக்கள் தலைமையிலான சுற்றுச்சூழல் சார் இயக்கமாகும்.
தாழ்வான முகடுகள், காடுகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுரங்க நடவடிக்கையினால் பாதிக்கப்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நிலத்தடி நீர் மீளேற்றம், பருவநிலைத் தணிப்பு மற்றும் பல்லுயிர் வளங்காப்பு ஆகியவற்றில் குறிப்பாக வட இந்தியாவில் ஆரவல்லிகள் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.