இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிக் குழுவை மேம்படுத்துவதற்காகவும் இளம் ஆராய்ச்சியாளர்களை ஈர்த்துத் தக்க வைப்பதற்காகவும் அரசு பின்வரும் திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றது.
பிரதம மந்திரியின் ஆராய்ச்சி உதவித் தொகை
திறமையான மாணவர்களை நாட்டிற்குள்ளேயே ஆராய்ச்சியில் ஈடுபடுத்த கவர்ச்சிகரமான உதவித்தொகை அளிக்கப்படுகின்றது.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு 5 வருடங்கள் உதவித்தொகை வழங்கப்படுகின்றன.
முதல் இரண்டு வருடங்களுக்கு மாதத்திற்கு 70000 ரூபாய்
மூன்றாம் வருடத்தில் மாதத்திற்கு 75000 ரூபாய்
வருடாந்திர ஆராய்ச்சிக்கான உதவித் தொகை மானியமாக இரண்டு லட்ச ரூபாயுடன் 4வது மற்றும் 5வது வருடங்களில் மாதத்திற்கு 80000 ரூபாய்.
ஆராய்ச்சிப் பூங்காக்களை எற்படுத்துதல்
கரக்பூர் ஐஐடி, பம்பாய் ஐஐடி, டெல்லி ஐஐடி, கௌஹாத்தி ஐஐடி, கான்பூர் ஐஐடி, ஹைதராபாத் ஐஐடி, காந்தி நகர் ஐஐடி மற்றும் பெங்களூரு இந்திய அறிவியல் மையம் ஆகிய இடங்களில் ஆராய்ச்சி மையங்களை ஏற்படுத்துதல்.
புதுமை மற்றும் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிக்கான தாக்கம் (Impacting research in Innovation and Technology - IMPRINT)
தொழிற்துறைகளின் தேவைகளை நேரடியாக பாதிக்கும் உயர் வகைக்கான புதுமைகளை மேம்படுத்தி அதன் மூலம் இந்திய உற்பத்தித் துறையின் போட்டித் திறனை அதிகரிக்க இது எண்ணுகின்றது.
வருடாந்திர அடிப்படையில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தங்கள் வளாகத்திற்குள்ளேயேப் புத்தாக்கத்திற்கானச் சுற்றுச்சூழலை மேம்படுத்திட 960 உயர் கல்வி நிலையங்களில் நிறுவனங்களின் புத்தாக்கக் குழுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
பகுதிநேர M.Tech மற்றும் பிஎச்டி படிப்பிற்கான சிறந்த பட்டதாரி பொறியியலாளர்களை ஈர்த்து, ஊக்கமூட்டி அவர்களுக்கு உதவித்தொகை அளிக்கும் நோக்குடன் என்ஐடியில் பயிற்றுநர் ஆசிரியர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.